ஹயடிஸ் என்பது பாதாள உலகம். இது கிரேக்கப் புராணத்தில் இடம்பெறுவது. இந்த உலகத்தில்தான் இறந்தவர்களின் ஆத்மாக்கள் திரும்பச் சென்றடைவதாக கிரேக்கர்கள் நம்பினார்கள். இந்த உலகத்தில் புனிதமானதும் விஷமுள்ளதுமான தண்ணீரைக் கொண்ட ஸ்டிக்ஸ் எனும் ஆறு ஓடுகிறது. கிரேக்க கடவுள்கள் இவ்ஆற்றில்தான் சத்தியம் செய்வார்கள். பொய்ச் சத்தியம் செய்தால், ஒரு ஆண்டுக்கு உணர்வும் உணர்ச்சியும் அற்றுப் போவார். 9 ஆண்டுகளுக்கு அவர் கடவுள் உலகிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். இந்நதிக்கு சாகாவரம் அளிக்கும் தன்மையுடையது.